Jun 26, 2009
என்னடா "வால்மீகி" நீ இன்னா பண்ண போற..?
விகடன் டாக்கிஸொட ரெண்டாவது படமுங்க.., ஊருக்கெல்லாம் மார்க்கு போட்டு வயித்தெரிச்சலகெளப்புனவங்க, இனிமே சினிமா பக்கமே தலவெச்சி படுக்க மாட்டாங்கன்னு நெனக்கிறேன்.
எத்தன படம் பாத்திருக்கோ..,திருடிட்டு மாமியார் (ஜெயிலுக்கு) ஊட்டுக்கு போற ஹீரோவா அகில் வர்றாரு.அட அதாங்க அந்த கல்லுரி படத்துல நடிச்சாரே அவருதான். அவங்கள மீரா நந்தன் அப்புறம் இன்னொரு பொண்ணு தேவிகா ரெண்டு பேரும் லவ் பண்றாங்க, ஆனா நம்ம ஹீரோ மீராவ மட்டுந்தான் லவ் பன்றாரு. ஆனாலும் அவரோட லவ்வுக்கு தடையா இருக்குறதே அந்த திருட்டு தொழில் தான். அவரால அத விட முடியல, எல்லாரையும் மாத்தி நல்ல வழிக்கு கொண்டு வர்ற மீரா நம்ம ஹீரோ அகிலையும் எப்பிடியாவது மாத்தி கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறாங்க,அவரோட ஆச நிறைவேரிச்சா, இல்லையாங்குறது தான் படத்தோட கிளைமாக்ஸ்.
ஹீரோ அகில் ரொம்ப பொருத்தமான ஆள்தான். என்ன கத நடக்குற இடம் எல்லாமே ஸ்லம் ஏரியாதான். அவரோட முகம் அதுக்கு பொருத்தமா இருக்கு.
அப்புறம் புதுப்பொண்ணு மீராநந்தன், பொண்ணு ரொம்ப சோக்கா நடிக்குது. ஆனான் கவர்ச்சி காட்டுனா கண்டிப்பா தாக்கு பிடிக்கலாம். இன்னொரு பொண்ணு தேவிகா நல்ல கும்முன்னு மூட கெளப்புற பொண்ணு, அட நடிப்புல பிச்சி உதருதுங்க,
பைத்தியக்காரனா வர்ற படவா கோபி இந்த படத்துல நடிக்க சான்ஸ் கிடச்ச உடனே "காதல்" படத்த திரும்ப திரும்ப போட்டு பாத்துருப்பார்னு நெனைக்கிறேன்.என்னாமா அப்பிடியே பரத் டிட்டோவா ஆக்டு குடுத்துருக்குராரு.
அப்புறம் படத்துல பெருசா ஆளுங்கெல்லாம் கிடையாது.
அழகப்பனோட கேமரா முக்கால்வாசி படத்த இருட்டா தான் காட்டுது. இப்பிடி இருட்டுல எடுத்தா அது மணிரத்னம் படமாயிடுமா? என்ன?
முக்கிய சொல்ல வேண்டியது இளையராஜாவோட மியூசிக், அய்யா தோர தயவு செஞ்சி நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்கோ, திரும்ப, திரும்ப போட்ட ட்யுனையே போட்டு எங்க உசுர எடுக்காதீங்க? அப்புறம் என்னங்க? ஒரு பாட்டு கூட மனசுல நிக்க மாட்டேன்கிது.
படத்தோட டைரக்டர் புது ஆளு ஜி.அனந்த நாராயணன், ஆளு பேச ஆரம்பிச்சா ரெண்டு மணி நேரத்துக்கு கம்மியா பேசவே மாட்டாரு, ஆனா படத்துல எதுவுமே இல்ல மேட்டரு...
ஒரு நாலஞ்சி தடவ இந்த படத்த பாத்தீங்கன்னா? கண்டிப்பா மெட்ராஸ் பாஷைய ஈஸியா கத்துக்கலாம்.அந்தளவுக்கு "நாஸ்தா துன்னியா" "இன்னாப்பா எப்டி கீர" இப்டி படம் முழுக்க ஒரே "ஸ்லம் ஏரியா" பாஷ தான்.அதுக்கு ஏத்த மாதிரி காட்டுற ஏரியாக்களும் மூக்க பொத்த வைக்கற ஏரியாக்கள்.அதனாலோ என்னவோ கூவத்துக்கு நடுவுல உக்காந்து படம்பாக்குற "பீலிங்" வருது.
படத்துல, "என்னடா பாண்டி என்ன பண்ண போற" ன்னு ஒரு பாட்டு இருக்கு,அத கேக்குறப்போ போட்ட துட்டாவது வருமா? பாவம் இந்த படத்தோட தயாரிப்பாளர் என்ன பண்ண போறாரோ? ன்னு நம்ம மனசு ரொம்ப 'பீல்' பண்ணுதுங்க.
சீரியல் எடுத்து சம்பாதிச்ச பணத்த சினிமாவுல உட்டுட்டு போற கம்பெனி லிஸ்ட்ல விகடன் நிறுவனமும் சேர்ந்திடும்னு நெனைக்கிறேன்.இப்பவும் கெட்டுப்போகல இதோட உங்க ஆட்டத்த நிறுத்திக்கங்க...
பின்குறிப்பு : அது சரி அந்த "நூறு மார்க்கு" கதைய படமா எடுப்பீங்களா?இல்லியா?
_RL0001.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக