வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 10:04 AM IST
பிறந்தநாளையொட்டி நடிகர் விஜய் வடபழனி ஜே.எஸ்.கல்யாண மண்டபத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி: உங்கள் பிறந்த நாள் விருப்பம் என்ன?
பதில்: ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருகிறேன். ஏழை மாணவ- மாணவிகளுக்காக இலவச கம்ப்ïட்டர் பயிற்சி மையங்கள் துவக்க விரும்பினேன். அதை இந்த பிறந்தநாளில் நிறைவேற்றி இருக்கிறேன். இரண்டு பயிற்சிமையம் திறந்துள்ளÚன். இந்த எண்ணிக்கை மேலும் உயரும். இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாமும் இன்று நடத்தப்பட்டது. உணவும் வழங்கப்பட்டது.
கே: ரசிகர்களை அழைத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உள்ளீர்களே? அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமா?
பதில்: ரசிகர்களிடம் கருத்து கேட்டது உண்மை தான். பொதுமக்கள் பெண்கள் என எல்லோரிடமும் அபிப்பிராயம் கேட்டோம். அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணிகளில் ஈடுபடலாம் என்று எல்லோரும் தெரிவித்தனர். அவர்கள் கருத்தை நான் ஒதுக்கவில்லை. ஆனாலும் அரசியலில் இப்போதைக்கு ஈடுபடும் யோசனை எதுவும் இல்லை.
கே: ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி உள்ளீர்களே? மிரட்டல் வந்ததா?
ப: மிரட்டல் ஏதும் வரவில்லை. மிரட்டல் வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அப்படி வந்தாலும் பயப்படமாட்டேன்.
கே: மக்கள் இயக்கமாக மாற்றுவதால் ரசிகர்கள் தொண்டர்களாக மாறவேண்டி வருமே?
ப: என் ரசிகர்கள் எப்போதோ தொண்டர்களாகி விட்டார்கள்.
கே: வேட்டைக்காரன் படம் எப்போது ரிலீசாகும்?
ப: 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. தீபாவளிக்கு ரிலீசாகும்.
கே: 50-வது படம் முடிவாகிவிட்டதா?
ப: எனது 50-வது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார். டைரக்டர் முவடிவாகவில்லை.
இவ்வாறு விஜய் கூறினார்.
இவ்வாறு விஜய் கூறினார்.
_RL0001.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக