வெள்ளி, 26 ஜூன், 2009

ரீமாசென்னிடம் சிக்கி தவித்தேன்; கார்த்தி ருசிகர பேட்டி

ரீமாசென்னிடம் சிக்கி தவித்தேன்; கார்த்தி ருசிகர பேட்டி
பருத்திவீரன் கார்த்தியின் 2-வது படம் “ஆயிரத்தில் ஒருவன்”. 2 வருடங்களுக்கு மேலாக டைரக்டர் செல்வராவன் செதுக்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. பட அனுபவம் குறித்து கார்த்தி கூறியதாவது:-

டைரக்டர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதையை சொன்னார்.
எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் உடனே சம்மதித்தேன். நான் நினைத்ததை போல இப்படம் பெரிய பட்ஜெட் படம்தான் என்றாலும் இவ்வளவு பட்ஜெட் ஆகும் என நினைக்கவில்லை. ரூ.15 கோடி பட்ஜெட் திட்டமிட்டோம். ஆனால் கடைசியில் ரூ.32 கோடி ஆகிவிட்டது. இதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இப்படத்தை ஆக்சன் படம், ரொமான்ஸ் படம், வரலாற்று கால படம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. இயற்கையையும், மனிதர்களையும் பற்றியது தான் இந்த படம். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அளைவருக்கும் பிடிக்கக் கூடிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
செல்வராகவன் திரைக்கதையில் நிறைய மேஜிக் செய்திருக்கார். படத்திற்காக கேரள வனத்துறை அனுமதி பெற்று சாலக்குடியில் சூட்டிங் நடத்தினோம். இரவு, பகலாக காட்டில் தங்கினோம். அதுபோல ஒரிசாவில் உள்ள புளோரா மற்றும் பவுனா காட்டில் மட்டும் 45 நாட்கள் தங்கினோம். இது ராஜநாகம், கொடிய விஷ பாம்புகள் அதிகமுள்ள பகுதி. அங்கு மிகவும் ரிஸ்க் எடுத்துதான் காட்சிகளை படமாக்கினோம்.
ரீமாசென், ஆன்ட்ரியா என 2 பேர் இருந்தாலும் எனக்கு யாரும் ஜோடி கிடையாது. ஆனால் அவர்களுடன் டூயட் ஆடுவேன். ஆன்ட்ரியாவுக்கு தமிழில் இது 2-வது படம். தொல்பொருள் ஆராய்ச்சியாளராக நடித்திருக்கிறார். ரீமாசென் ஸ்டிரிக்டான அதிகாரியாகவும், பார்த்திபன் அரசராகவும் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் முதல் பாதி முழுவதும் நான் சென்னை குப்பத்து இளைஞன் போல லோக்கல் தமிழ் பேசி நடித்துள்ளேன். முதல் பாதி முழுவதும் மிகவும் ஜாலியாக இருக்கும். 2-வது பாதியில் தான் பார்த்திபன் வருவார். அவரிடம் இருந்து இந்த படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். சூட்டிங் இடைவெளியில் ரீமாசென், ஆன்ட்ரியாவிடம் தூண்டிலில் சிக்கிய மீன் போல சிக்கி கொண்டேன். பெண்கள் கல்லூரிக்குள் தனியாக ஒரு பையன் சென்றால் என்ன பாடுபாடுவானோ அது போலத்தான் நானும் தவித்தேன். அவ்வப்போது செல்வராகவன் தான் என்னை காப்பாற்றுவார். மிகவும் ஜாலியாக இருந்த இந்த அனுபவங்களை வாழ்நாளில் மறக்கவே முடியாது.

கருத்துகள் இல்லை: